Posts

Showing posts from August, 2023

Karadayan Nonbu

  Sweet adai :  Take 1 cup rice flour Roast well rice flour in kadai .like light sandal colour.Take one heavy bottom pan pour  1 1/2cup water in it. தண்ணீர் நன்றாக  கொதி வந்த உடன் 11/2 to 13/4 cup jaggery போட்டு சேர்ந்து கொதிக்க விடணும்.மேலாக வெல்ல தண்ணீரை எடுத்து வைத்து அடியில் இருக்கும் கல்லை கொட்டி விடவும்.வெல்லத்தில் சின்ன கற்கள் இருக்கும்.பிறகு நன்றாக கொதித்த வெல்ல தண்ணீரில் தேங்காய் துருவல்,ஏலப்பொடி,ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைத்துள்ள மாவையும் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும்.அது பந்து போல கெட்டியாகி இருக்கும்.அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.அதை ஒரு இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் வளை size க்கு தட்டி இட்லி தட்டி வைத்து குக்கரில் ஒரு சவுண்ட் வரும் வரை வேக விடவும். Salt adai : அரிசி மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.Fry pan ல்  எண்ணை விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,வர மிளகாய்,பெருங்காயம் போட்டு சிவப்பு கலரில் வறுக்கவும்.அதில் தேவையான அளவு பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு 1 cup மாவுக்கு 2 cup தண்ணீர் விட்டு அதில் உப்பு தேங்காய் துருவல் போட்டு நன...

Lathakumar's kitchen

ஸ்நான பௌடர்

வெய்யில் காலம் வந்துவிட்டது.  இப்போ கொஞ்சம் எல்லோரும் உள்ளேயேயிருந்தாலுமே வேர்வையினால் ஏற்படும் அரிப்பு சொறி வேர்குரு மற்றும் சிலருக்கு உடம்பு முமூக்க சிவப்பு சிவப்பா தடிப்பு தடிப்பா ஆகும்.  இதெல்லாம் எங்க வீட்டிலே ஒரு பிரச்சினையேயில்லை. இந்த வெய்யில் காலம் முமூக்க நாங்க யாரும் சோப்பே யூஸ் பண்றதில்லை.  என்னதான் விலை உயர்ந்த சோப் வாங்கினாலும் அதிலும் ஏதேனும் உடம்பிற்கு ஒவ்வாத கெமிக்கல் இருக்கும்.  அந்த காலத்திலேயெல்லாம் சிறு குழந்தைகளுக்கு பச்சை பயறு பொடி கடலைமாவு பொடி இவைகளைத்தான் உபயோகித்து குழந்தை குளிப்பாட்டுவார்கள். இப்போ எங்க வீட்டில் வெய்யில் காலம் முமூக்க உபயோகிக்கும் அளவிற்கு உடம்பிற்கு சோப்பிற்கு பதிலாக தேய்த்துகுளிக்கும் பொடி  செய்து வைத்துவிடுவோம். இதைத்தான் குழைந்தைகளில் இருந்து பெரியவர்கள் உபயோகித்து குளிப்போம். நாள் முமூக்க உடம்பு புத்துணர்ச்சியோடு இருப்பதும் அல்லாமல் நல்ல வாசனையோடும் இருக்கும்.  வியர்வை நாற்றம் நம்மீது துளிகூட இருக்காது.  மேலும் என்னதான் கைக்கு க்ளவுஸ்ஸெல்லாம் போட்டுண்டு வண்டி ஓட்டினாலும் பெண்களுக்கு கை முன் கை ஒரு கலரில...

Thirvadirai Kali

திருவாதிரை திருநாள் #ஆருத்ரா_தரிசனம்..... சிவபெருமானுக்குகந்த அருமையான களி /ஏழுகறி கூட்டு /அடை செய்முறை பார்போம். #திருவாதிரைக்களி.... #தேவையானபொருள்கள்.... பச்சரிசி - 2 கப்  வெல்லம் - 400 கிராம்  நெய் - கால் கப்  முந்திரி - 10  திராட்சை - 15  தேங்காய் துருவல் - அரை கப்  ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி  #செய்முறை.... தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மா...

Sweet Pongal

 பொங்கலுக்கு ஒரு கப் அரிசிக்கு ஒரு டீ ஸ்பூன் பாசி பருப்பு. இந்த அளவுக்கு மூணு கப் தண்ணீர் வேணும்.முதலில் ஒரு கப் பால் விட்டு பொங்கி வர விடணும்.அது பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லணும்.Just pray some time God for all your fortunes. பால் வழிந்து விடாமல் அடுப்பை சின்னது பண்ணனும். அந்த பாலுடன் இன்னும் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதித்த பின்பு அரிசி ,பாசி பருப்பு களைந்து போட்டு அடுப்பிலேயே வைத்து weigt போட்டு மூணு சவுண்ட் விட்டு அடுப்பை அணைக்கவும்.குக்கர் திறக்க வந்த உடன்  அடுப்பில் ஏற்றி ,அடுப்பை on பண்ணி, சின்னதாக வைத்து கொண்டு வெல்லம் இரண்டு கப் அதில் போட்டு வெல்லம் கரையும் வரை கிளறவும்.நன்றாக சேர்ந்து வந்த உடன் ஏலபொடி,மிந்திரிநெய்யில் பொரித்து போடவும்.இதான் பொங்கல் அன்று செய்யும் பொங்கல்.

Venn Pongal

 Venn Pongal அரிசி ஒரு கப்,பாசி பருப்பு கால் கப் வெண் பொங்கலுக்கு.பாசி பருப்பை வெறும் வாணலியில் லைட்டாக வாசனை வரும் வரை வறுத்து அரிசியுடன் சேர்த்து களையவும்.இதில் உப்பு,ஒரு டேபில் ஸ்பூன் எண்ணை,மிளகு,சீரகம்,இஞ்சி  மூணு கப் தண்ணீர் எல்லாம் போட்டு ஒரு பாத்திரத்தில் விட்டு குக்கரில் வைத்து மூணு ,நாலு சவுண்ட் விட்டு அணைக்கவும்.குக்கர் திறக்க வந்த உடன் அதில் நெய்யில் பொரித்த முந்திரி ,கருவேப்பிலை போட்டு கிளறவும்.ஜன்னல் கிட்ட வரும் வெய்யிலில் or சுவாமியிடம் வடை,பொங்கல்களை வைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் பண்ணவும்.