ஸ்நான பௌடர்
வெய்யில் காலம் வந்துவிட்டது. இப்போ கொஞ்சம் எல்லோரும் உள்ளேயேயிருந்தாலுமே வேர்வையினால் ஏற்படும் அரிப்பு சொறி வேர்குரு மற்றும் சிலருக்கு உடம்பு முமூக்க சிவப்பு சிவப்பா தடிப்பு தடிப்பா ஆகும். இதெல்லாம் எங்க வீட்டிலே ஒரு பிரச்சினையேயில்லை.
இந்த வெய்யில் காலம் முமூக்க நாங்க யாரும் சோப்பே யூஸ் பண்றதில்லை. என்னதான் விலை உயர்ந்த சோப் வாங்கினாலும் அதிலும் ஏதேனும் உடம்பிற்கு ஒவ்வாத கெமிக்கல் இருக்கும். அந்த காலத்திலேயெல்லாம் சிறு குழந்தைகளுக்கு பச்சை பயறு பொடி கடலைமாவு பொடி இவைகளைத்தான் உபயோகித்து குழந்தை குளிப்பாட்டுவார்கள்.
இப்போ எங்க வீட்டில் வெய்யில் காலம் முமூக்க உபயோகிக்கும் அளவிற்கு உடம்பிற்கு சோப்பிற்கு பதிலாக தேய்த்துகுளிக்கும் பொடி செய்து வைத்துவிடுவோம். இதைத்தான் குழைந்தைகளில் இருந்து பெரியவர்கள் உபயோகித்து குளிப்போம்.
நாள் முமூக்க உடம்பு புத்துணர்ச்சியோடு இருப்பதும் அல்லாமல் நல்ல வாசனையோடும் இருக்கும். வியர்வை நாற்றம் நம்மீது துளிகூட இருக்காது. மேலும் என்னதான் கைக்கு க்ளவுஸ்ஸெல்லாம் போட்டுண்டு வண்டி ஓட்டினாலும் பெண்களுக்கு கை முன் கை ஒரு கலரிலும் பின் கை ஒரு கலரிலும் இரு.கும் அதெல்லாம் இந்த பொடி போட்டு குளித்தால் நாளடைவில் மாறிவிடும்.
முகம் நல்ல பொலிவாக இருக்கும். முக்கியமா முகப்பருவரவே வராது. கண்ணிற்கு கீழ் கருவளையம் கண்டிப்பா வராது. என் வீட்டில் யாருக்கும் முகப்பரு கண்ணிற்கு கீழ் கருவளையம் உடல் சோர்வு மற்றும் முகம் ஒரு கலர் உடல் ஒரு கலர் யாருக்கும் கிடையாது. எல்லாம் இந்தப்பொடியால்தான்.
இதற்கு தேவையான பொருட்கள்
பச்சை பயறு 1/2 Kg
கடலைபருப்பு 1/4 kg
ரோஜா இதழ்கள் 100 Gm
மரிக்கொழுந்து பூ 5 கட்டு
ஆரன்ஜ் தோல் காயவைத்தது கைப்பிடி அளவு
எலுமிச்சை தோல் காயவைத்தது கைப்பிடி அளவு.
மகிழம் பூ 100 Gm
வேப்பம் பூ 50 Gm
கஸ்த்தூரி மஞ்சள் கிழங்கு 200 Gm
ஆவாரம் பூ 100 Gm
அதிமதுரம் 100 Gm
பூலாங்கிழங்கு 100 Gm
கோரைக்கிழங்கு 100 Gm
கார்போக அரிசி 100 Gm
சம்பங்கி விதை 100. Gm
நெல்லிக்காய் காயவைத்தது( நெல்லிமுல்லி) 100 Gm
கடுக்காய் 50Gm
வெட்டிவேர் 100 Gm
வசம்பு 50 Gm
மேலே சொன்ன அனைத்து பொருட்களுமே நாட்டுமருந்து கடைகளில் வெகு சுலபமாக கிடைக்கும். நாங்கள் என் வீட்டில் எலுமிச்சை பிழிந்தால் தோலை காயப்போட்டு எடுத்து வைத்துப்போம். இதேபோல்தான் ஆரன்ஜ் பழம் வாங்கினாலும் தோலை காயவைத்து சேர்த்துவைத்து இப்படி பொடி செய்ய உபயோகிப்போம்.
மேலே சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி தூசியில்லாமல் சுத்தப்படுத்திட்டு நல்லா அலசி வீட்டிற்குள்ளேயே நிழல் உணர்த்தலாக உலர்த்தனும். பிறகு அதிகமாக இருந்தால் மிக்ஸியில் அரைக்கமுடியாது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
பொடியில் எல்லாமே உடம்பிற்கு குளிர்ச்சியானவிஷயங்கள்தான் இருக்கு வாசனைக்கு வெட்டிவேர் மகிழம்பூ மரிக்கொழுந்து பூ கஸ்தூரி மஞ்சள் போட்டிருப்பதால் வாசனை முமூநாள் அப்படியே யிருக்கும்.வேப்பம் பூ வசம்பூ நெல்லிமுல்லி அதிமதுரம் இருப்பதால் வெய்யில்காலத்தில் வரும் சொறி சிரங்கு நெருங்கவே முடியாது.
ஆவாரம் பூ கோரைகிழங்கு பூலான் கிழங்கு இருப்பதால் உடல் முமூவதும் ஒரே கலர் மெயிண்டன் ஆகும். கை ஒருகலர் முகம் ஒரு கலர் இருக்கவேயிருக்காது.
இந்த பொடி பிறந்த குழைந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகிக்கலாம். என்வீட்டில் சோப்பு யாரும் உபயோகிப்பதில்லை இந்த பொடிதான். இதற்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்
"ஸ்நான பவுடர்"
நீங்களும் செய்துபாருங்கள் நண்பர்களே. நான் கொடுத்திருக்கும் அளவு ஒரு ஆறு நபர்கள் உள்ள குடும்பத்திற்கு ஆறு மாதத்திற்கு உபயோகப்படுத்தும் அளவு. சிறிய குடும்பம் என்றால் கொடுத்திருக்கும் அளவில் பாதி பாதி உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதற்கு முன் தலைமுடி பிரச்சினை எதுவானாலும் போக்கும் எண்ணெய் காய்ச்சும் முறை சொல்லியிருந்தேன். அதன் லிங்க்கும்
இந்த "ஸ்நான பவுடர்" செய்வது
மிகவும் சுலபம் .
"நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே...
நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி..."
"உனக்குமேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்......
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கணம் வரும்.....
உன்னையாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிக்கை தானாக வரும்....."
அன்புடன்
லதா குமார்
Comments
Post a Comment