ஸ்நான பௌடர்
வெய்யில் காலம் வந்துவிட்டது. இப்போ கொஞ்சம் எல்லோரும் உள்ளேயேயிருந்தாலுமே வேர்வையினால் ஏற்படும் அரிப்பு சொறி வேர்குரு மற்றும் சிலருக்கு உடம்பு முமூக்க சிவப்பு சிவப்பா தடிப்பு தடிப்பா ஆகும். இதெல்லாம் எங்க வீட்டிலே ஒரு பிரச்சினையேயில்லை. இந்த வெய்யில் காலம் முமூக்க நாங்க யாரும் சோப்பே யூஸ் பண்றதில்லை. என்னதான் விலை உயர்ந்த சோப் வாங்கினாலும் அதிலும் ஏதேனும் உடம்பிற்கு ஒவ்வாத கெமிக்கல் இருக்கும். அந்த காலத்திலேயெல்லாம் சிறு குழந்தைகளுக்கு பச்சை பயறு பொடி கடலைமாவு பொடி இவைகளைத்தான் உபயோகித்து குழந்தை குளிப்பாட்டுவார்கள். இப்போ எங்க வீட்டில் வெய்யில் காலம் முமூக்க உபயோகிக்கும் அளவிற்கு உடம்பிற்கு சோப்பிற்கு பதிலாக தேய்த்துகுளிக்கும் பொடி செய்து வைத்துவிடுவோம். இதைத்தான் குழைந்தைகளில் இருந்து பெரியவர்கள் உபயோகித்து குளிப்போம். நாள் முமூக்க உடம்பு புத்துணர்ச்சியோடு இருப்பதும் அல்லாமல் நல்ல வாசனையோடும் இருக்கும். வியர்வை நாற்றம் நம்மீது துளிகூட இருக்காது. மேலும் என்னதான் கைக்கு க்ளவுஸ்ஸெல்லாம் போட்டுண்டு வண்டி ஓட்டினாலும் பெண்களுக்கு கை முன் கை ஒரு கலரில...
Good
ReplyDelete